மார்க்சிய தத்துவமும் பயர்பாக்கும்

 

மார்க்ஸ் ஒரு புதிய தத்துவஞான நூலுக்கான அவர்களுடைய திட்டம் பயர்பாக்ஸ் பற்றிய கருத்துரை நூலுக்கான குறிப்புகளில் பிரதிபலிக்கின்றன .
மார்க்ஸ் இறுதியாக  மனிதகுல வரலாற்றை பற்றி அவருடைய அடிப்படையிலேயே புதிய ஒரு கருத்தோட்டத்தை வளர்ப்பதற்காக அது அப்போது மிகவும் பொதுவான விவரங்களை கொண்டதாக இருந்த போதிலும் அவருடைய கருத்துகள் பயன்பாட்டில் கருத்தோட்டங்கள் இணக்கமாக இல்லை என்பது மட்டுமல்ல அவர்களுக்கு நேர் எதிராகவும் இருந்தது என்பதை உணர்ந்தார் அத்துடன் அவருடைய கம்யூனிசத்திற்கும் பியர்பாக்கின்  வெளிவேடமான கம்யூனிசத்திற்கும் இடையிலான வேறுபாட்டை பிரித்துக் காட்ட வேண்டிய அவசியமும் இருந்தது.
பியர் பாக் தான் கம்யூனிஸ்ட் பற்றுறுதி கொண்டவர் என கூறிக் கொண்டார். அவர் தன்னை "பியர்க்பர்க்கின்" கம்யூனிஸ்டு துறவி என்று அழைத்துக்கொண்டார் . இந்நிலையில் மெய்யான புரட்சிகரமான கம்யூனிஸ்ட் தத்துவத்திற்க்கும்  ஒரு போலியான கம்யூனிஸ்ட் கருதோட்டங்களுக்கும் இடையில் உள்ள அடிப்படையான வேறுபாடுகளை தெளிவாக சுட்டிக்காட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. பயர்பாக்கின்  பொருள்முதல் வாதத்தின் உறுதியற்ற நிலையை பற்றியும் குறுகிய வரப்புகளை பற்றியும் மார்க்ஸ்  தெளிவாக தெரிந்து கொண்டிருந்த போதிலும் முற்போக்கான தத்துவஞானத்தை வளர்ப்பதில் பியர்பாக்கின் சாதனையைப் பற்றி மார்க்ஸ் மாபெரும் மதிப்புக்  கொண்டிருந்தார் .
பியர்பாக் பற்றிய கருத்து கட்டுரைகள்
பியர்பாக் பற்றிய பதினோரு கருத்துக்களை கொண்ட ஒரு கட்டுரை எழுதியிருந்தார் அந்த குறிப்புகள் வேகமாக எழுதப்பட்டவை அதில் பெருமளவில் அபிவிருத்தி செய்து விவரித்து கூற வேண்டியிருந்தது அவைகள் அதிகமாகப் போனால் ஐந்து பக்கங்களுக்கு மேல் இல்லை ஆயினும் ஆழ்ந்த கருத்துக்களிலும் கவனக்குவியல் களிலும் தெளிவிலும் சுருக்க கூறியுள்ள முறைக்கும் அநேகமாக அதற்கு ஈடு இணையே இல்லை .அதைப்பற்றி எங்கல்ஸ் கூறியுள்ளார் "அவை புதிய உலக கண்ணோட்டத்தின் ஒளிமிக்க நவரத்தினங்களின் சுரங்கமாக இருந்த முதல் ஆவணமாகும் " (மார்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் தொ 3 பக்கம் 336  ).
அவர்களுடைய மையமான கருத்து சமுதாய வாழ்வில் புரட்சிகரமான பௌதிக பொருளாயத செயல்முறை பழக்கத்தில் தீர்மானகரமான பங்கை பற்றியதாகும் செயல்முறை பழக்கம்தான் புதிய வழியில் புறப்படுவதற்கான இடம் சகல வற்றுக்கும் அதுதான் அடிப்படையானது அதுவே கட்டளைக்கல் அது காரிய நோக்கமானது எனவே தத்துவஞான புலனறிதலுமாகும் என்று மார்க்ஸ் கூறுகிறார்.
மார்க்ஸ்க்கு முன்னரும் கூட சில தத்துவஞானிகள் செயல்முறை பழக்கம்தான் புலனறிதலுக்கு கட்டளை கல்லாகவும் காரிய  நோக்கமாக உள்ளது என்பதை உணர்ந்து இருந்தார்கள் வெளிப்படையாக தெரிவிக்கும் செய்திருந்தார்கள். ஆனால் சமுதாய வாழ்விலும் புலன் அறிதலின் வளர்ச்சிப்போக்கிலும் செயல்முறை பழக்கத்தின் உண்மையான பங்கும் தத்துவஞானத்தில் இதுவரை இது ஒரு வகை பிரிவு என்னும் முறையில் அதன் முக்கியத்துவமும் உறுதியாக நிலை பெற்று நிற்கும் புரட்சிகரமான  வர்க்கமான பாட்டாளி வர்க்க நோக்கு நிலையிலிருந்து தான் உண்மையாக புரிந்துகொள்ளமுடியும். புலனறிதல் தத்துவத்திற்கும் செயல்முறைப் பழக்கம்  என்னும் வகை முறையை புகுத்தி  அறிமுகப்படுத்தியதானது அறிவாதார முறையிலேயே ஒரு உண்மையான புரட்சியை குறிக்கிறது . அது தத்துவஞானம் முழுவதிலும் ஏற்பட்டுள்ள புரட்சியின் நின்ற பிரதான தனி அம்சங்களில் ஒன்றாக வகுத்தமைக்கப்பட்டிருக்கிறது .
இந்தப் புதிய கண்ணோட்டத்தில் இருந்து தொடங்கி மார்க்ஸ் பழைய பொருள்முதல்வாதத்தை அது என்ன செய்வது என்று சிந்தித்துக் கொண்டிருக்கும் போக்கையும் எண்ண முதல் வாதத்தை அது செயல்முறை பழக்கத்தை வெறும் தத்துவ சொற்களின் அளவு தாழ்த்தி விட்ட காரணத்தால் - குற்ற விமர்சனம் செய்தார் இதைக் கூறும்போது மார்க்ஸ்  பொருள்முதல்வாதம் எண்ணமுதல்வாதம் ஆகிய இரண்டுக்கும் அப்பால் மேல் மட்டத்திற்கு உயர்வதற்கு முயற்சித்தார் என்று கூறுவதற்காக அல்ல ஆனால் அவர் தனது கண்ணோட்டத்தை ஒரு புதிய பொருள்முதல்வாதம் என்று உறுதியாக பிரகடனம் செய்தார் .
எண்ணமுதல்வாத தத்துவ ஞானிகளுக்கு நேர்மாறாக மார்க்ஸ் உண்மை நிலைமைகளை மாற்றுவதற்கு வெறும் சுத்தமான தத்துவார்த்த விமர்சனம் செய்தால் மட்டும் போதாது என்பதை வலியுறுத்திக் கூறினார் . நடைமுறையில் ஆன கூர்ந்த விமர்சன பூர்வமான புரட்சிகரமான செயல்பாட்டை கொள்ள வேண்டியது அவசியமாகும். சிந்தித்தல் மட்டுமன்றி இருத்தலையும் மாற்ற வேண்டியது அவசியமாகும். புரட்சிகரமான செயல்முறை பழக்கத்தில் வளர்ச்சியின் போக்கில் தான் மனிதன் தன்னையும் தன்னைச் சுற்றியுள்ள உண்மை நிலைமைகளையும் இவ்விரண்டையும் மாற்றுகிறான்.
மனிதன் ஒரு அருவமான தனிமைப்பட்டு நிற்கும் தனிநபர் என்பது பியர் பாக்கின் மானசீகவியலான  வரலாற்று தன்மையற்ற  கருத்துருவங்களாகும் இதற்கு நேர்மாறாக மார்ஸ் வரலாற்று இயல் பொருள் முதல் வாதத்தை பற்றிய மற்றொரு மிக கேந்திரமான தத்துவத்கூறை உருவாக்கினார் . அதாவது மனிதத் தன்மையின் உள் இயல்பே சகல சமூதாய உறவுகளின் மொத்தமான பொது தோற்றம்தான் என்பதாகும். மனிதன் சமுதாயத்தில் நிலை கொண்டிருக்கிறான் அவன் சமுதாயத்தின் ஆக்கப் பொருள் ஆகும் ஆனால் அது சமுதாயத்தின் வெறும் அருவமான ஒரு ஆக்கப் பொருளாக அல்ல , அதற்கு பதில் சமுதாயத்தின் ஒரு குறிப்பிட்ட திட்டவட்டமான வடிவத்தின் ஒவ்வொரு எடுத்துக் காட்டிலும் அது அமைந்துள்ளது.
மதத்தில் இருந்து விடுபட்டு அதை வெற்றிகொள்வதற்கு உறுதியான நிலைபேறுமிக்க பாட்டாளிவர்க்க நாத்திகம் தான் வழி என்பதை மார்க்ஸ் கண்டார். மார்க்ஸ்க்கு முந்திய காலப் பொருள் முதல் வாதிகள் குறிப்பாக பயர்பாக் மதத்தை அதன் உலகியல் சார்பான அடிப்படைக்கு தாழ்த்தினார்கள். அதை கடுமையான தெளிவான குற்ற விமர்சனத்திற்க்கு உள்ளாக்கினார்கள். அதில் தான் அவருடைய வரலாற்று சாதனைகள் அடங்கி இருக்கின்றன. ஆனால் மார்க்ஸ் தான் இந்த சமயசார்பற்ற உலகியல் சார்பில் அஸ்திவாரத்திலே உள்ள முரண்பாடுகளில் இருந்து தான் சமுதாய பகைமைகளிலிருந்து தான் மதம் வெளிப்பட்டு தோன்றியது என்றும் எனவே மதத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்றால் இன்று நிலையிலுள்ள சமுதாயத்தை புரட்சிகரமாக மாற்றுவது ஒன்றே வழி என்று எடுத்துக்காட்டினார்.  பின்னர் அவர் இந்த கருத்தை அதனுடைய கலைத்  தன்மையான வடிவத்தில் மூலதன நூலின் முதல் தொகுதியில் உருவாக்கி வளர்த்தெடுத்தார்.
முந்தைய பொருள்முதல்வாதம் சாராம்சத்தில் சிந்தனை இயல்பு கொண்டதாகவும் மானசீக தன்மை கொண்டதாகும் இருந்திருக்கிறது. மார்க்ஸ் சிந்தனை இயல்பை மாற்றி புரட்சிகரமான செயல்முறை பழக்கம் கொண்டதாக ஆக்கினார் . பழைய பொருள்முதல்வாத பதில் புதிய தர்க்கவியல் பொருள்முதல்வாதத்தை கம்யூனிசத்தின் தத்துவஞான அஸ்திவாரமாக மாற்றியமைத்தார். அவருடைய இறுதியான கருத்து கட்டுரை புதிய கண்ணோட்டத்தில் புகழ்மிக்க கலை நயமான மேம்பாடு நிறைந்த கோட்பாடு தொகுப்புகளை கொண்டிருக்கிறது. அதில் உள்ள புகழ் மிக்க வாக்கியம், "தத்துவஞானிகள் இதுவரை உலகத்தை பல்வேறு வழிகளில் வியாக்கியானம் மட்டும்தான் செய்துள்ளார்கள் ஆனால் முக்கியமான அம்சம் இவ்வுலகை மாற்றுவது எவ்வாறு என்பது தான் ".(மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் தொகுதி-1 பக்கம் 11) . மேலே உள்ள பகுதி மார்க்சின் வாழ்க்கை வரலாற்றின் பக்கம் 176-178 ல் உள்ளது.

மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் தொகுதி-1 லிருந்து கீழே...

பயர்பாக்ஸின் பொருள்முதல்வாதம் உள்ளிட்டு இதுவரை இருந்து வந்திருக்கும் எல்லா பொருள்முதல்வாததுகும் உரிய பிரதான குறைபாடு இதுதான் ; பொருள் எதார்த்தம் , புலன் உணர்வு என்பது புறப்பொருள் அல்லது சிந்தித்து எனும் வடிவத்தில் மட்டுமே கருத்தில் கொள்ளப் பட்டிருக்கிறது .ஆனால் மனித புலனுணர்வு உள்ள நடவடிக்கை என்று நடைமுறை என்றும் கொள்ளப்படவில்லை அக நிலையாக கொள்ளப்படவில்லை.எனவே பொருள்முதல்வாதம் அதற்கு நேர் எதிரான நிலையில் கருத்துமுதல்வாதம் செயலாக்கம் உள்ள பகுதியை வளர்க்க நேர்ந்தது ஆனால் கருத்தியலாக மட்டுமே இதை செய்தது.  ஏனெனில் கருத்துமுதல்வாதம் எதார்த்தமான புலன் உணர்வு உள்ள நடவடிக்கையை அறியாது. சிந்தனை புற பொருட்களிலிருந்து உண்மையில் வகை வேறுபாடு செய்யப்பட்ட புலன்புல உணர்வுள்ள புறப் பொருட்களை பயர்பாக் விரும்புகிறார் ஆனால் மனிதன் நடவடிக்கையோ பொருளான நடவடிக்கையாக கருத்தில் கொள்வதில்லை. எனவே கிறிஸ்தவ சமயத்தின் சாரம்சம் எனும் நூலில் அவர் தத்துவார்த்த போக்கை மட்டுமே உண்மையான மனித போக்கு என்று கருதுகிறார் , அதே போதில் நடைமுறை அதன் அசிங்கமான யூத வழிபட்ட தோற்ற வடிவில் மட்டுமே கருதி பார்க்கப்பட்டு அறுதி செய்யப்படுகிறது . எனவே அவர் புரட்சிகரமான நடைமுறை விமர்சனம் செயல்பாட்டின் உட்பொருளை புரிந்துகொள்ளவில்லை.
2.

Comments

Popular posts from this blog

21ஆம் நூற்றாண்டின் முதலாளித்துவம்