21ஆம் நூற்றாண்டின் முதலாளித்துவம்
மூலதனம் பிரம்மாண்டமாக வளர்ந்து இருந்த போதிலும் முதலாளித்துவும் சீரழிந்து கொண்டிருக்கிறது.
நிஜங்களையும் நிஜ பிம்பங்களையும் மாய பிம்பங்களையும் உள்ளடக்கிய பௌதிக இயக்கமாகத்தான் மானுட சமுதாய இயக்கம் இருக்கிறது . மானிட சமுதாயத்தின் நிஜ இயக்கம் உடனடி வாழ்க்கையின் உற்பத்தியும் மறு உற்பத்தியும்தான் இதுவே இருவகைப்பட்ட தன்மை கொண்டது ஒன்று வாழ்க்கைக்கு வேண்டிய பிழைப்பு சாதனங்களை உற்பத்தி செய்வது = அதாவது உணவு உடை வீடு ஆகியவற்றையும் அவற்றுக்குத் தேவையான கருவிகளை உற்பத்தி செய்வது இன்னொன்று மனிதர்களையே உற்பத்தி செய்வது. மனிதர்களை உற்பத்தி செய்யும் இயக்கம் குடும்ப அமைப்பு முறையாகவும் பிழைப்பு சாதனங்களை உற்பத்தி செய்யும் இயக்கம் உற்பத்தி முறையாகவும் இருக்கிறது = இரண்டு இயக்கங்களும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்த இயக்கங்கள் ஆகும் இந்த இரண்டு இயக்கங்களின் வளர்ச்சி தான் ஒட்டுமொத்த சமுதாயத்தின் வளர்ச்சியாக இருக்கிறது.
இந்த இயக்கங்களில் ஏற்படும் வளர்ச்சிகளின் அடிப்படையில் சமுதாயத்தின் வரலாற்றுக் கட்டங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன இரண்டு இயக்கங்களையும் உற்பத்தி மற்றும் நுகர்வு இயக்கம் ஒன்றிணைக்கிறது இந்த உற்பத்தி மற்றும் நுகர்வு இயக்கம் பண்ட சுழற்சியின் வடிவில் நிகழ்கிறது.
பண்ட சுழற்சி இயக்கம்
பண்ட சுழற்சி இயக்கத்தின் அடிப்படை பண்ட உற்பத்தியாக இருக்கிறது பண்டம் என்பது பயன் மதிப்பு பரிமாற்றம் மதிப்பு கொண்ட பொருள்கள் ஆகும். தானே ஆன பொருட்களை தனக்கான பொருளாக மாற்றும் மனித உழைப்பே பொருட்களுக்கு பயன் மதிப்பையும் பரிமாற்ற மதிப்பையும் தருகிறது . ஆகவே பிழைப்பு சாதனங்கள் அனைத்துமே மனித உழைப்பின் விளைப் பொருள்களாக இருக்கின்றன . இந்தப் பிழைப்பு சாதனங்களே பண்டங்கள் ஆகும். மனிதர்களால் உற்பத்தி செய்யப்படும் பிழைப்பு சாதனங்கள் மனிதர்களாலேயே நுகரவும் படுகிறது இந்த உற்பத்தியும் நுகர்வும் மீண்டும் மீண்டும் நிகழ்வதால் பண்ட சுழற்சி ஏற்படுகிறது .
பண்ட சுழற்சியால் தனிமனித உற்பத்தி சமூக உற்பத்தியாய் மாறுகிறது
தனி மனிதர்கள் தங்களுக்கு தேவையான பிழைப்பு சாதனங்கள் அனைத்தையும் உற்பத்தி செய்ய முடியாது. ஆகவே ஒவ்வொரு தனி மனிதனும் தான் உற்பத்தி செய்த பிழைப்பு சாதனங்களை மற்றவர்கள் உற்பத்தி செய்த பிழைப்பு சாதனங்களுடன் பரிமாறிக் கொள்கிறான். தினந்தினம் நடக்க இந்த லட்சக்கணக்கான பரிமாற்றங்கள் தனி மனிதர்களுக்கிடையே திட்ட ஓட்டமான உறவுகளை ஏற்படுத்தி தனி மனிதர்கள் உற்பத்தி செய்யும் பண்டங்களின் பயன் மதிப்பை சமப்படுத்தி வருகின்றன. இந்த இயக்கங்கள் ஒவ்வொரு தனி மனிதனின் உற்பத்தியையும் சமூகத்திற்கான உற்பத்தியாய் மாற்றுகின்றன . ஆகவே ஒவ்வொரு தனி மனிதன் நுகர்வும் சமுதாய நுகர்வாய் மாறுகிறது . இந்த உற்பத்தி நுகர்வு இயக்கம் சமுதாயம் முழுவதையும் ஒருங்கிணைக்கும் சமூக உறவுகளைப் படைக்கின்றன . சமுதாயம் என்பது தனி மனிதர்களின் தொகுப்பு அல்ல மாறாக மானுட உறவுகளின் ஒட்டு மொத்த தொகுப்பாகும்.
சந்தைக்கான உற்பத்தியில் ஈடுபடும் உழைப்பு சமூக உழைப்பாய் மாறுகிறது
தனிமனித உழைப்பும் கூட்டு உழைப்பும் சுய தேவைகளையோ அல்லது சிறு குழுவின் தேவைகளையோ பூர்த்தி செய்து கொண்டிருந்த நிலையை பண்ட சுழற்சியின் வளர்ச்சி சந்தையின் தேவைகளை பூர்த்தி செய்யும் உழைப்பாக மாற்றி அமைத்தது. சந்தையில் பண்டங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. ஒவ்வொரு பரிமாற்றமும் தனி மனிதன் உற்பத்தி செய்த பண்டங்களை சமுதாயத்திற்கானதாக மாற்றியது இதனால் சந்தைக்கான உற்பத்தி சமுதாயத்திற்கான உற்பத்தியாகவும் சந்தைக்கான உழைப்பு சமுதாயத்திற்கான உழைப்பாகவும் மாறுகிறது .
பண பண்ட சுழற்சி இயக்கம் தனிமனித உழைப்பையும் தனிமனித தேவைகளையும் பின்னிப் பிணைப்பதன் மூலம் அது சமுதாய இயக்கமாகிறது. உழைப்பையும் உற்பத்தியையும் சமூகத் தன்மை பெற்ற பெய்கிறது. ஆகவே பண்ட சுழற்சி முறை உழைப்பையும் உற்பத்தியையும் சமூகமயமாகிறது .
ஆதியில் மூலதனம் வியாபாரம் மூலதனமாகவே தோன்றியது
ஆதியில் பண்டமாற்று முறையே பண்ட சுழற்ச்சியாக இருந்தது. மனிதர்களின் உழைப்புத் திறனில் ஏற்பட்ட வளர்ச்சி பண்டத்தின் பயன் மதிப்பை அதிகப்படுத்தி விரிவாக்கியது. இதனால் பண்டத்தில் தேவை அதிகமாகி பண்ட உற்பத்தி பெருகியது . இந்த பெருக்கம் பண்டங்களை பரிமாறிக்கொள்ள ஒரு பொது பண்டமாக தங்கத்தை கண்டறிந்தது. இறுதியில் பொது பண்டமான தங்கம் பணமாக வளர்ந்தது. இந்த வரலாற்றுக் கட்டத்தில் பண்ட சுழற்சி பண்டம் -பணம் - பண்டம் என்ற சுழற்சியில் இருந்தது . பண்டசுழற்சியில் ஏற்பட்ட இந்த வளர்ச்சி உற்பத்தியிலும் விநியோகித்தத்திலும் உத்தரவாதத்தை ஏற்படுத்தி உற்பத்தியை பெருக்கியது உற்பத்தியில் ஏற்பட்ட பெருக்கம், தேவைக்கான உற்பத்தியை அதாவது தங்களுக்கு தேவையான பண்டங்களை வாங்குவதற்கான பண்ட உற்பத்தியை சந்தைக்கான உற்பத்தியாக அதாவது விற்பதற்காகவே செய்யப்படும் உற்பத்தியாக மாற்றியது. பண்ட சுழற்சியின் இந்த கட்டத்தில் விற்பதற்காக பண்டங்களை வாங்கும் பணமாகத்தான் மூலதனம் தோன்றியது. பண்டம் -பணம்- பண்டம் என்றிருந்த பண்ட சுழற்சி இயக்கம் பணம்- பண்டம் -பணம் என்ற பண்ட சுழற்சி இயக்கமாக மாறியது. இந்த இயக்கத்தில் வியாபாரம் மூலதனமாக தோன்றிய மூலதனம் சந்தைகளை விரிவு படுத்தியது .
குடும்ப அமைப்பு முறை மனித உழைப்பை வளர்த்தது
உணவு மற்றும் உடலுறவு தேவைகளை பெறுவதில் காட்டுமிராண்டி நிலையையும் அநாகரி நிலையும் கடந்து மனித சமுதாயம் நாகரிக நிலை அடைந்தபோது குடும்பம் உருவானது. பண்ட உற்பத்தியில் ஏற்பட்ட வளர்ச்சி குடும்ப அமைப்பு முறையை வளர்த்தது. தனி மனித பிழைப்பு சாதனங்கள் குடும்ப அமைப்பின் தேவைகளாக ஒழுங்கமைந்தன . குடும்பம் தனி மனிதர்களை உற்பத்தி செய்தது. குடும்பம் பிழைப்பதற்கான பண்டங்களை பெறுவதற்காக ஏதாவது ஒரு பண்ட உற்பத்தியில் அல்லது சேகரிப்பில் குடும்பத்திலுள்ள மனிதர்களை ஈடு படுத்தியது. இதனால் மனித உழைப்பு திறன் வளர்ந்தது. குடும்ப அமைப்பு முறை பண்ட உற்பத்திக்காக உழைக்கும் மனிதர்களை உருவாக்கியது பண்ட உற்பத்தி முறை மனிதர்களை உற்பத்தி செய்யும் குடும்ப அமைப்பின் தேவைகளை நிறைவு செய்கிறது. ஒவ்வொரு தனி மனிதனும் ஒரு குடும்பத்தை பிரதிநிதித்துவ படுத்துகிறான். பண்ட சுழற்சியில் குடும்ப முறை உற்பத்திக்கு தேவையான மனிதர்களை உற்பத்தி செய்து தந்தம், உற்பத்தி முறை குடும்பத்திற்கு தேவையான பிழைப்பு சாதனங்களை உற்பத்தி செய்து தந்தம் பரஸ்பரம் வினைபுரிந்து கொள்கின்றன.
வியாபாரம் மூலதனம் தொழில் மூலதனமாக வளர்ந்தது
பணம் -பண்டம் -பணம் என்ற பண்டச் சுழற்றில் தோன்றிய வியாபாரம் மூலதனம் சந்தைகளை உருவாக்கியது. அப்போது நிலவி கொண்டிருந்த பட்டறை தொழில்களும் சிறுவீத உற்பத்தி அமைப்புகளும் பண்ட சுழற்சியில் விரிவடைந்து வந்த சந்தைக்கு போதுமானதாக இல்லை அதனால் முதலாளித்துவத்திற்கு முந்திய சமுதாயத்தில் நிலவிய பட்டறை தொழில்கள் அப்புறபடுத்தப்பட்டு அதன் இடத்தில் தொழிற்சாலை உற்பத்தி முறை நிறுவப்பட்டு பண்ட சுழற்சி முறை வளர்ந்தது . அதுவரை விற்பதற்காக பண்டங்களை வாங்க பயன்படுத்திய பணம் இப்பொழுது உற்பத்தி சாதனங்களுக்கான கருவிகளையும் மூலப் பொருட்களையும் வாங்குவதற்கான பணமாக மாறியது . இந்த பணம் தான் தொழில் மூலதனமாகும். தொழில் மூலதனத்தின் தோற்றம் பாரம்பரிய சமூக கட்டுப்பாடுகளால் , தனி மனிதர்களையும் குடும்பங்களையும் பிணைத்திருந்த உற்பத்தி சாதனங்களை பறித்து குடும்பங்களை சிதைத்து உற்பத்தி சாதனங்களை ஓரிடத்தில் குவித்து தொழிற்சாலைகளாக மாற்றியது. உழைப்பாளிகள் ஏதும் மற்ற ஆனால் சுதந்திரமானவர்களாக மாற்றினார்கள். உழைப்பாளிகள் தொழிற்சாலைக்கு வந்து உழைத்து விட்டு சென்றனர் . இந்த உற்பத்தி சாதனங்களுக்கும் உழைப்பாளிகளுக்கும் கொடுக்கப்பட்ட கூலிக்கும் செலவழிக்கப்பட்ட பணம்தான் தொழில் மூலதனமானது. இந்த மூலதன உடைமையாளர்கள் சமுதாயத்தில் மூலதன உடைமையாளர்கள் என்று சமூகப் பிரிவாக , முதலாளி வர்க்கமானார்கள். உடைமைகள் ஏதும் அற்ற உழைக்கும் சமூகப் பிரிவாக பாட்டாளி வர்க்கமானார்கள். மூலதனம் தொழில் மூலதனமாகும் மாறுவதற்கு முன் நிலவிய அனைத்து சமூக பிரிவுகளுக்கான வர்க்கங்களும் தங்கள் உடமைகளையும் தொழில்களையும் இழந்து மூலதன உடமையாளர்களுக்காகவோ அல்லது ஏதுமற்ற பாட்டாளிகளாகவோ மாறினார்கள் .
இந்த முதலாளித்து வளர்ச்சி என்பது மூளை முடுக்குகளில் இருந்தவர்களையெல்லாம் தொடர்பு கொண்டு ஒருங்கிணைத்தது .. எல்லா தேசங்களையும் மிகவும் அநாகரிக கட்டத்தில் இருந்த தேசங்களை கூட நாகரிகட்டத்திற்குள் இழுத்தது . உற்பத்தியிலும் வினியோகித்திலும் நாடுகளுக்கு இடையில் நெருக்கத்தை ஏற்படுத்தியது . இதன் மூலம் உற்பத்தியிலும் நுகர்விலும் மானுட சமுதாயம் முழுவதையும் ஒருங்கிணைக்கும் ஒரு உற்பத்தி விநியோக முறையை வெளிக்கொணர்ந்தது. மூலதன வளர்ச்சி உலக மக்கள் அனைவரையும் மானுட தேவைகளுக்கான பண்ட உற்பத்தியில் ஈடுபடுத்துவதும் அதற்கு கூலி வழங்குவதன் மூலம் மக்களின் வாங்கும் சக்தியை உறுதி செய்வதும் ; வாங்கும் சக்தி பெற்ற மக்கள் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்களை நுகர்வதும் மீண்டும் பண்ட உற்பத்தியில் ஈடுபடுவதுமான பண்ட சுழற்சி இயக்கம் மானுடத்தை தடையின்றி வளர்க்க முடியும் மானுட வளர்ச்சியில் நிஜ இயக்கத்தை நிர்ணயிப்பது உடனடி வாழ்க்கையின் உற்பத்தியும் மறு உற்பத்தியும் தான். வாழ்க்கைக்கு வேண்டிய பிழைப்பு சாதனங்களை உற்பத்தி செய்வது - அதாவது உணவு உடை வீடு ஆகியவற்றையும் அவற்றைப் பெறுவதற்கான கருவிகளையும் உற்பத்தி செய்வதும் மனிதர்களை உற்பத்தி செய்வதும் ஆகிய இரண்டு வகை உற்பத்தியும் சுவிகரிப்பும் மறு உற்பத்தியும் சமுதாயத்தின் அடிப்படை இயக்கமாக இருக்கிறது. தானேயா பொருள்களை தனக்கான பொருளாக மாற்றும் இயக்கமான உற்பத்தி முறையும் தானேயேயான மனிதர்களை தனக்கான மனிதர்களாகும் இயக்கமான குடும்ப அமைப்பு முறையும்தான் மானிட சமுதாயத்தின் அடிக்கட்டுமானமாக இருக்கிறது. இந்த அடிக்கட்டுமானத்தின் மீதுதான சமுதாயத்தின் மேல் கட்டுமானமான அரசு, சட்டம், நீதி , மதம் கலை இலக்கியம் மற்றும் ஒழுக்க நெறிகள் கட்டமைக்கப்படுகின்றன.
Comments
Post a Comment