மார்க்சிய தத்துவமும் பயர்பாக்கும்
மார்க்ஸ் ஒரு புதிய தத்துவஞான நூலுக்கான அவர்களுடைய திட்டம் பயர்பாக்ஸ் பற்றிய கருத்துரை நூலுக்கான குறிப்புகளில் பிரதிபலிக்கின்றன . மார்க்ஸ் இறுதியாக மனிதகுல வரலாற்றை பற்றி அவருடைய அடிப்படையிலேயே புதிய ஒரு கருத்தோட்டத்தை வளர்ப்பதற்காக அது அப்போது மிகவும் பொதுவான விவரங்களை கொண்டதாக இருந்த போதிலும் அவருடைய கருத்துகள் பயன்பாட்டில் கருத்தோட்டங்கள் இணக்கமாக இல்லை என்பது மட்டுமல்ல அவர்களுக்கு நேர் எதிராகவும் இருந்தது என்பதை உணர்ந்தார் அத்துடன் அவருடைய கம்யூனிசத்திற்கும் பியர்பாக்கின் வெளிவேடமான கம்யூனிசத்திற்கும் இடையிலான வேறுபாட்டை பிரித்துக் காட்ட வேண்டிய அவசியமும் இருந்தது. பியர் பாக் தான் கம்யூனிஸ்ட் பற்றுறுதி கொண்டவர் என கூறிக் கொண்டார். அவர் தன்னை "பியர்க்பர்க்கின்" கம்யூனிஸ்டு துறவி என்று அழைத்துக்கொண்டார் . இந்நிலையில் மெய்யான புரட்சிகரமான கம்யூனிஸ்ட் தத்துவத்திற்க்கும் ஒரு போலியான கம்யூனிஸ்ட் கருதோட்டங்களுக்கும் இடையில் உள்ள அடிப்படையான வேறுபாடுகளை தெளிவாக சுட்டிக்காட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. பயர்பாக்கின் பொருள்முதல் வாதத்தின் உறுதியற்ற நிலையை பற்றிய...